நடிகர் சிம்புவுக்கு பிரச்சனைகள் சில வந்தாலும் பக்கத்துணையாக பல ரசிகர்கள் இருக்கிறார்கள். திறமையான நடிகரான இவர் நடிப்பு, நடனம், பாடல், இசை என பல பரிமாணம் காட்டி வருகிறார்.

AAA படம் தோல்வியானதை தொடர்ந்து துவண்டு விடாமல் படங்களுக்கு இசையமைக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார். சந்தானம் நடிக்கும் சக்கப்போடு போடு ராஜா படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் கூட ஹரீஷ் கல்யாண் பாடும் பாடல் குறித்த சிறு வீடியோ வெளியானது. இந்நிலையில் நவம்பர் 8 ஆன இன்று தட்றோம் தூக்றோம் என்ற படத்திற்காக சிம்பு பாடியிருக்கும் பண மதிப்பிழப்பு பாடல் மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது. கபிலன்வைரமுத்து எழுதிய இந்த பாடலுக்கு பாலமுரளி இசையமைத்துள்ளார்.

இதற்கு #DemonetizationAnthem என பெயரிட்டு டேக் செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here